A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 3:03PM
முக்கிய செய்திகள்
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் முன், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.            தென்மாநிலங்களுக்கு மட்டும் ரயில்கள் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது -மத்திய அரசு.            விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் -தலைமை தளபதி            தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.           

Jun 11, 2021
8:28PM

வாகன ஓட்டுநர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும்- மத்திய அமைச்சகம்.

NSD Logo
வாகன ஓட்டுநர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும் என்று மத்திய தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விதிமுறை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த மையங்களில் பதிவு செய்தவர்களுக்கு முறையான ஓட்டுநர் பயிற்சி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் ஓட்டுநர் பயிற்சிக்கான சிறப்பு வழித்தடங்களும், ளiஅரடயவடிச மூலம் உயர்தரமான பயிற்சி அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி எடுப்பவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறும் வேளையில் அவர்கள் மீண்டும் வாகனங்களை ஓட்டி காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் திறமைமிக்க வாகன ஓட்டுநர் அதிக அளவில் இல்லை என்றும் மேலும் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்பட்டுவதாலும் இந்த அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்கள் துவக்கப்பட உள்ளதாக அந்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8