A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 12:40PM
முக்கிய செய்திகள்
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.            நாடுமுழுவதும் 27 கோடிக்கும் மேற்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தி, புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது -மத்திய சுகாதார அமைச்சகம்            கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.            தொழிலாளர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலவாழ்வை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது -மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு சந்தோஷ் கங்குவார்            பருப்பு விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.           

Jun 11, 2021
8:42PM

மாவட்ட செய்திகள்

NEWS ON AIR
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிதி மற்றும்; 15 மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பை மாநில அமைச்சர் திரு எ வ வேலு இன்று வழங்கினார்.

சிவகங்கை மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம், தௌpப்பு நீர் பாசனம் ஆகியவற்றுக்கான வேளாண் கருவிகளை மானியத்தில் பெற தகுந்த ஆவணங்களுடன் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.  

நாமக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் கோவிட் பரிசோதனை செய்த 15 தனியார் ஆய்வகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரியலுர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்திற்கு 15 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி ரத்னா வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட மலையோர கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட அம்மாவட்ட ஆட்சியர் திரு அரவிந்த், கோவிட் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார்.  

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட நடவடிக்கை எடுக்க அம்மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி, தென்காசி  மாவட்டங்களில் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

 தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் திருமதி திவ்ய தர்ஷினி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரியில் உள்ள தொல்லியல் துறையில் அகழ் வைப்பகத்தையும், அவர் பார்வையிட்டார்.
            

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8