A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 12:40PM
முக்கிய செய்திகள்
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.            நாடுமுழுவதும் 27 கோடிக்கும் மேற்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தி, புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது -மத்திய சுகாதார அமைச்சகம்            கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.            தொழிலாளர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலவாழ்வை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது -மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு சந்தோஷ் கங்குவார்            பருப்பு விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.           

Jun 11, 2021
8:35PM

தில்லியில் வீடுகளுக்கே சென்று நியாய விலை பொருட்களை நேரில் வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரு அரவிந்த கெஜ்ரிவாலின் திட்டமானது தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-க்கு முரணானது.

NEWS ON AIR
தில்லியில் வீடுகளுக்கே சென்று நியாய விலை பொருட்களை நேரில் வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரு அரவிந்த கெஜ்ரிவாலின் திட்டமானது தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-க்கு முரணானது என்று மத்திய அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டமானது நியாய விலைக்கடை பொருட்களை சுரண்டுவதற்கு வழிவகை செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை தில்லி முதலமைச்சர் ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி பயனாளர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் தான் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த நேரடி விநியோகம் என்பது கள்ளச்சந்தை வர்த்தகத்திற்கு வழி உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

   தொடர்புடைய செய்தி

13505

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8