A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 3:03PM
முக்கிய செய்திகள்
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் முன், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.            தென்மாநிலங்களுக்கு மட்டும் ரயில்கள் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது -மத்திய அரசு.            விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் -தலைமை தளபதி            தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.           

Jun 03, 2021
4:41PM

உலக கோப்பை கால்பந்து ஆசிய பிரிவு தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி கத்தார் அணியுடன் மோதுகிறது.

NSD Logo
உலக கோப்பை கால்பந்து ஆசிய பிரிவு தகுதி சுற்று போட்டியில்  இந்திய அணி கத்தார் அணியுடன்  இன்று  மோதுகிறது.

ஏற்கெனவே நடைபெற்ற 5 ஆட்டங்களில் இந்திய அணி 3 போட்டிகளில் டிரா செய்து  இரண்டு  போட்டிகளில்  தோல்வி  அடைந்தது.

இதையடுத்து 3 புள்ளிகளுடன் தமது பிரிவில் இந்தியா 4-வது இடத்தைப் பெற்று உலகக் கோப்பைக்குத்  தகுதி  பெறும்  வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் எஞ்சிய தகுதிச் சுற்று ஆட்டங்கள் கத்தார் தலைநகர் தோகாவில் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இந்தியா-கத்தார் இடையே இன்று நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30  மணிக்கு தொடங்குகிறது.

2022-ம்  ஆண்டுக்கான உலக கோப்பை மற்றும் 2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய அணி ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்  அணிகளும்  இடம்பெற்றுள்ளன.

 உலக்கோப்பைக்கான வாய்ப்பை இந்தியா இழந்த போதும் இந்த தகுதிச் சுற்றில்  இந்தியா 3-வது இடத்துக்கு  முன்னேறினால்  ஆசிய கோப்பைக்கான  தகுதிப் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு நேரடியாக தகுதி  பெற  இயலும்.

 

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8