A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Jun 20, 2020
,
1:58PM
நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக்கூட அந்நியருக்கு விட்டுத் தர முடியாது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
NEWS ON AIR
நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக்கூட அந்நியருக்கு விட்டுத் தர முடியாது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
சீனா-வுடனான எல்லைப் பிரச்சினை குறித்து பிரதமர் திரு நரேந்திரமோடி நேற்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தியபோது இதனைத் தெரிவித்தார்.
லடாக்கில் தாய்நாட்டிற்காக நமது தீரமிக்க ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்திருப்பதாகவும், அவர்களது தியாகம் ஒருபோதும் வீணாகாது என்றும், அவர்கள் என்றென்றும் நினைவுகூரப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
எல்லையை பாதுகாப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு முழுசுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினையில் இந்தியா தனது நிலைப்பாட்டை ராஜிய ரீதியிலும் சீனாவிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு நாடே ஒன்றுபட்டு ஆதரவை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் துணிச்சலான செயல்பாடுகள்மீது நமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எல்லையில் சீனா நடந்து கொண்ட விதம், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, அமைதியையும், நட்புறவையும் விரும்புகிறது என்றும், அதேநேரத்தில் இறையாண்மையை பாதுகாக்க மிகுந்த முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் ஆகியோரும் பேசினர்.
காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத்பவார் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ஒட்டுமொத்த தேசமே ஆதரவாக இருப்பதாக கூறினர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர்.
தொடர்புடைய செய்தி
8538
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1