A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Mar 19, 2020
,
9:55PM
உலகில் உள்ள மனித குலத்தை அச்சுறுத்தும் விதத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது- பிரதமர் மோடி
NEWS ON AIR
உலகளாவிய தொற்று நோயாக கருதப்படும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் வெற்றி அடைய, நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் வாயிலாக இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாக உள்ளது என்று கூறினார்.
இந்த நேரத்தில் இந்திய மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டு மக்கள் வெளியேவராமல் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மருத்துவர்கள், செவிலியர்கள், ஊடகவியலாளர்கள், காவல்துறையினர் ஆகியோர்களின் சிறப்பான பணிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில்
22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி ஐந்துக்கு, அவர்களுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
கொரோனா வைரசிற்கு இதுவரை மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் திடீரென கொரோனா வைரஸ் உலக நாடுகளை தாக்கி உள்ளது என்றும் கூறினார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது என்று கூறிய பிரதமர், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் இந்த வைரஸ் தாக்குதலை நாம் தடுக்க முடியும் என்றார்.
130 கோடி மக்களை கொண்டுள்ள இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது என்பது சவாலான பணியாகும் என்றும் இது சாதாரணமான சூழல் அல்ல என்றும் பிரதமர் கூறினார்.
கொரோனா வைரஸ், வளர்ந்த நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறிய பிரதமர், இந்த வைரஸ் இந்தியாவை தாக்காது என்று நினைப்பது தவறhனது என எச்சரித்தார்.
மத்திய – மாநில அரசுகள் தெரிவிக்கும் முன்னெச்சரிக்கைகளை மக்கள் உறுதியாக பின்பற்ற வேண்டும் என்றும் நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உலகம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை உணர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொது இடங்களில் கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய பிரதமர், சமூகத்தில் இருந்து தற்காலிகமாக நாம் தனிமைப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
7752
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1