முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Feb 28, 2020
9:24PM

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்கட்சிகள் உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறி வருகின்றனர் -அமித் ஷா

NEWS ON AIR
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்கட்சிகள் உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறி மக்களை குழப்பதில் ஆழ்த்தி வருவதாக உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
புவனேஸ்வரில் இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த ஒரு இஸ்லாமிய அல்லது சிறுபான்மையினரின் குடியுரிமையும் பாதிக்கப்படாது என்று உறுதிபட தெரிவித்தார்.
சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களின் குடியுரிமை இந்த புதிய சட்டத்தால் பறிபோய்விடும் என்று பரப்பபட்டிருக்கும் தவறான தகவல் முற்றிலுமாக களையப்படவேண்டும் என்று உள்துறை அமைச்சர்  வலியுறுத்தினார்.
ஒடிசா மாநிலத்தின் வளர்ச்சிக்கா பிஜேபி பாடுபடும் என்றும், மக்கள் பிஜேபிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் திரு.அமித் ஷா கேட்டுக்கொண்டார்.


   தொடர்புடைய செய்தி

7100

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1