மக்களின்தேவைகளை அறிந்து, தமிழக அரசு அனைத்து நலத்திட்டஉதவிகளையும் உடனுக்குடன் அளித்து வருவதாக சமூகநலத்துறை அமைச்சர் திருமதி சரோஜா கூறியிருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமூகநலத்துறையின் மூலம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், இதுவரை 12 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.
இத்திட்டத்திற்காக, இதுவரை தமிழக அரசு 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.