மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடையே முழுமையாக சென்றடைவதை பிஜேபி-யினர் உறுதி செய்திட வேண்டுமென்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன் வலியுறுத்தியுள்ளார். இன்று திருப்பூரில் தம்மை சந்தித்த பிஜேபி நிர்வாகிகளிடையே அவர் இதனை வலியுறுத்தினார்.
பின்னர் பொதுமக்களின் கோரிக்கை மனுவினையும் அமைச்சர் பெற்றுக் கொண்டார். இந்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து தேனி சென்ற திரு முருகன், அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து, அவரது மனைவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.