A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 2:21PM
முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.            நாடுமுழுவதும் 27 கோடிக்கும் மேற்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தி, புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது -மத்திய சுகாதார அமைச்சகம்            கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.            தொழிலாளர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலவாழ்வை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது -மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு சந்தோஷ் கங்குவார்           

Jun 11, 2021
8:10PM

தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

NEWS ON AIR
தமிழ்நாட்டில் தற்போது உள்ள ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம்மாதம் 14-ம் தேதி காலை 6 மணி முதல் 21-ம்தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

கோவிட் தொற்றுக்கு அதிகம்பேர் சிகிச்சை பெற்றுவரும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர எஞ்சியுள்ள 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில், சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள், வேளாண் உபகரணங்கள் பழுதுநீக்கும் கடைகள், கைவினை பொருள் விற்பனை, உள்ளிட்ட கடைகள், கண் கண்ணாடி விற்பனை, மண்பாண்டம் பொருட்கள், பழுதுநீக்கும் கடைகள், கட்டுமானப் பொருட்கள் கடைகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட நேரங்களில் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடம், இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடம் கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதி, காப்பீடு, மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

இம்மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   

கோவிட் தொற்றுக்கு அதிகம் பேர் சிகிச்சை பெற்று வரும் குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவர வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8