A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 2:35PM
முக்கிய செய்திகள்
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் முன், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.            தென்மாநிலங்களுக்கு மட்டும் ரயில்கள் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது -மத்திய அரசு.            விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் -தலைமை தளபதி            தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.           

Jun 11, 2021
8:04PM

நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் திரு லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

NEWS ON AIR
நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் இந்நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த மே 7ந் தேதி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக இருந்ததாகவும் அதில் 78 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 24 மணிநேரத்தில் 91 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவின் சுமார் 335 மாவட்டங்களில் நோய் தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மே 3ந் தேதி இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 81 சதவீதமாக இருந்தது என்றும், அது தற்போது 95 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

   தொடர்புடைய செய்தி

13499

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8