A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 3:03PM
முக்கிய செய்திகள்
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் முன், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.            தென்மாநிலங்களுக்கு மட்டும் ரயில்கள் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது -மத்திய அரசு.            விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் -தலைமை தளபதி            தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.           

Jun 11, 2021
2:22PM

பிரதமர் திரு நரேந்திரமோடி, ஜி-7 அமைப்பின் உச்சிமாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக நாளையும், நாளை மறுநாளும் பங்கேற்கிறார்.

NEWS ON AIR
பிரதமர் திரு நரேந்திரமோடி, பிரிட்டன் பிரதமர் திரு போரிஸ் ஜான்சன் அழைப்பின் பேரில், நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவுள்ள ஜி-ஏழு அமைப்பின் உச்சிமாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றுகிறார்.
பிரிட்டனில் உள்ள கடற்கரை நகரமான கார்ன்வால்-லில்  நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, தென்கொரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
ஜி-ஏழு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திரமோடி பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும்.
தற்போது இந்த அமைப்புக்கு பிரிட்டன் பிரதமர் திரு போரிஸ் ஜான்சன் தலைவராக உள்ளதால், கோவிட்-19 தொற்று, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பெருந்தொற்றிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், வாரியற்ற வர்த்தக நடவடிக்கை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட நான்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இதனிடையே கோவிட்-19 தொற்று உருவானது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று ஜி-ஏழு நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
உச்சிமாநாடு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நகலில்  இது 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு 100 கோடி கோவிட் தடுப்பூசிகளை அனுப்புவது என்றும் இந்த மாநாட்டின் வரைவு நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   தொடர்புடைய செய்தி

13488

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8