முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Feb 02, 2021
2:41PM

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று தொடங்கியது.

NEWS ON AIR
தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக மாநிலத்தில் கோவிட்-19 தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றினார்.

மாநிலம் முழுவதும் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டதற்காக  அரசுக்கு, ஆளுநர் தமது உரையில் பாராட்டு தெரிவித்தார்.

கோவிட் நோய் தொற்றினை சிறப்பாக கையாண்டு, இறப்பு விகிதத்தை கட்டுக்குள் கொண்டு வந்த சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.

கோவிட் காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசின் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக மின்சார வாகன கொள்கையும், மின்னணு வன்பொருள் உற்பத்திக் கொள்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 மாநிலத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழகம் மின்மிகை மாநிலம் தொடர்ந்து திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

வரும் சட்டப்பேரவை தேர்தல் பணிகளை அரசு நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் சரபங்கா நீரேற்று திட்டப்பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ஆயிரத்து 652 கோடி ரூபாய் நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

கர்நாடக அரசு காவிhpயின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு 50 சதவீத பகிர்வு அடிப்படையில் நிதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 12 பேரை மீட்பதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் திரு பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

முன்னதாக சட்டப்பேரவையின்; ஆளுநர் உரையாற்ற தொடங்கியபோது, எதிர்க்கட்சித் தலைவர் திரு மு க ஸ்டாலின் சில கருத்துக்களை தெரிவிக்க முயன்றார்.

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் இந்திய யுனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு மு க ஸ்டாலின், இந்த கூட்டத்தொடரை முழுமையாக திமுக புறக்கணிக்கும் என்று தெரிவித்தார்.

இதே கருத்தை காங்கிரஸ் மற்றும் இந்திய யுனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

   தொடர்புடைய செய்தி

11755

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1